மேலும் செய்திகள்
விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
15-Oct-2025
ஜார்ஜ் டவுன்: மண் பானை, அடுப்பு உள்ளிட்டவற்றை அரசே கொள்முதல் செய்து, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கக் கோரி, தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தலைவர் சேம.நாராயணன் தலைமையில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண தொகை, 5,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும். அடிமனை பட்டா வழங்க விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல், மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், மண்பானை, மண் அடுப்புகளை சாலையில் வைத்து, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நுாதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
15-Oct-2025