உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொடுங்கையூரில் மின் தடை நள்ளிரவில் அலுவலகம் முற்றுகை

கொடுங்கையூரில் மின் தடை நள்ளிரவில் அலுவலகம் முற்றுகை

கொடுங்கையூர் கொடுங்கையூர், கண்ணதாசன் நகரில் ஐஸ்வர்யா நகர், கோவிந்தசாமி தெரு உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக, தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது. இது குறித்து, மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மின் தடை ஏற்பட்டதால், முதியோர், குழந்தைகள் அவதியடைந்தனர். ஆத்திரமடைந்த பகுதிவாசிகள், தங்களது கை குழந்தைகளுடன், கண்ணதாசன் நகரில் அமைந்துள்ள மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.'மின் தடை ஏற்பட்டதால் தகவல் தெரிவிக்க மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டால், அவர்களது மொபைல் போன் எண்கள் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது' எனக்கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், 'மின் தடை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்' என உறுதியளித்ததையடுத்து, பகுதிவாசிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ