மேலும் செய்திகள்
வீட்டிலேயே குழந்தை பெற்ற கல்லுாரி மாணவி
08-May-2025
கே.கே., நகர்,:கே.கே.நகரில் விபத்தில் சிக்கிய கர்ப்பிணிக்கு, அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் கோபி, 28. இவரது மனைவி திவ்யா, 27. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.திவ்யா நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், நேற்று காலை கே.கே.நகர் சிவன் பார்க்கில் நடைபயிற்சிக்காக கணவனும், மனைவியும் சென்றுள்ளனர்.நடைபயிற்சியின்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டிற்கு செல்லலாம் என, கோபி மனைவியை அழைத்துள்ளார்.பின், தன் இருசக்கர வாகனத்தில் மனைவியை ஏற்றிக்கொண்டு, ஆத்திரத்தில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்ட கோபி முயன்றுள்ளார். அப்போது, பி.டி.ராஜன் சாலையில் சிவன் பார்க் அருகே உள்ள வேகத் தடையில் வாகனம் ஏறி இறங்கியதில், நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் திவ்யாவுக்கு வயிற்றில் பலமாக அடிபட்டது.வலியில் துடித்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.மருத்துவர்களின் பரிசோதனையில், வயிற்றில் இருந்த குழந்தை திசை திரும்பி இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.தலையில் பலத்த காயமடைந்த திவ்யாவிற்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
08-May-2025