உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ப்ருஹ்ம ஸபா சார்பில் ப்ரேமிக ஜெயந்தி உத்சவம்

ப்ருஹ்ம ஸபா சார்பில் ப்ரேமிக ஜெயந்தி உத்சவம்

மேற்கு மாம்பலம்:'ப்ருஹ்ம ஸபா' சார்பில், மேற்கு மாம்பலம் அயோத்ய மண்டபத்தில், இன்று முதல் 21ம் தேதி வரை, ப்ரேமிக ஜெயந்தி உத்சவம் நடைபெற உள்ளது. இன்று, ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் அவதார தினமாக இருப்பதால், மதியம் 2:00 மணி முதல் 3:30 மணி வரை, ப்ரேமிக குருகீர்த்தனங்களுடன் குறு பாதுகை திருமஞ்சமனம் நடக்கிறது. மதியம் 3:30 மணி முதல் 4:00 மணி வரை ஸ்ரீ ராமாயண பாட்டாபிஷேகம்; 4:00 மணி முதல் 5:00 மணி வரை லட்சார்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடக்கிறது. மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை பாதுகா புறப்பாடு மற்றும் மும்பை சீனிவாச பாகவதர் நகர சங்கீர்த்தனம்; இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை மும்பை மஹாதேவ புவா மஹராஜ் அபங்க பஜன் ஆகியவை நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !