பிரஸ் கிளப் கிரிக்கெட் பூந்தமல்லி அணி வெற்றி
சென்னை, பூந்தமல்லி, மதுரவாயல், அம்பத்துார், ஆவடி பத்திரிகை சங்கம் இணைந்து, 'டாப்ட்' கிரிக்கெட் எனும் பத்திரிகை சங்கத்திற்கு இடையேயான, கிரிக்கெட் போட்டியை கொளப்பாக்கத்தில், கடந்த 6ம் தேதி நடத்தியது. ஆறு ஓவர்களி அடிப்படையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் முதல் ஆட்டத்தில், மதுரவாயல்- - அம்பத்துார் பிரஸ் கிளப் அணிகள் மோதின.இதில், அம்பத்துார் அணி வென்றது. தொடர்ந்து இரண்டாவது போட்டியில் ஆவடி- - பூந்தமல்லி பிரஸ் கிளப் அணிகள் மோதின. இதில் பூந்தமல்லி அணி வெற்றி பெற்றது.இறுதி ஆட்டத்தில், அம்பத்துார் - பூந்தமல்லி பிரஸ் கிளப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் பேட் செய்த பூந்தமல்லி பிரஸ் கிளப் அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் குவித்தது.அடுத்து களம் இறங்கிய அம்பத்துார் அணியை 69 ரன்களில் வீழ்த்தி, 3 ரன்கள் வித்தியாசத்தில் பூந்தமல்லி பிரஸ் கிளப் அணி த்ரில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.