உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலைமையாசிரியர் ௶போக்சோவில் கைது

தலைமையாசிரியர் ௶போக்சோவில் கைது

ஆர்.கே.பேட்டை,ஆர்.கே.பேட்டை அருகே செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை பள்ளியில், திருத்தணி ஒன்றியம், தாடூர் கிராமத்தை சேர்ந்த தாமோதரன், 57, என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், அந்த பள்ளியில் படிக்கும் சிறுமியர் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமியர் இருவரும் சகோதரிகள். தலைமையாசிரியர் தங்களிடம் முறைகேடாக நடந்து கொள்வது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஆர்.கே.பேட்டை போலீசில் நேற்று புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர். சம்பவம் உண்மை என, தெரிந்து தலைமையாசிரியர் தாமோதரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடந்த வாரம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில், அரசு தொடக்க பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ