உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆணி விழுங்கி தற்கொலைக்கு முயன்ற கைதி

ஆணி விழுங்கி தற்கொலைக்கு முயன்ற கைதி

புழல், சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் அஜித், 26. கடந்த வாரம் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.இவரது தாய், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இவரை பார்க்க செல்லவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட யாரும் அஜித்தை பார்க்க சிறைக்கு செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் மன விரக்தியில் இருந்த அஜித், நேற்று முன்தினம் இரவு சிறையில் கீழே கிடந்த ஆணியை எடுத்து விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து சக கைதிகள், சிறை அலுவலர்களிடம் தெரிவித்தனர்.இதையடுத்து, சிறை மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி