மேலும் செய்திகள்
கரூர் நகராட்சி முன்னாள் தலைவர் மரணம்
03-May-2025
புழல், மே 23-புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கைதி, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். திருவொற்றியூர், திருநகர் முதல் தெருவை சேர்ந்த செல்வநாதனின் மகன் தமிழ்செல்வன், 42. ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, இந்தாண்டு பிப்ரவரியில் சிறையில் அடைக்கப்பட்டார்.உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில், இம்மாதம் 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி தமிழ்செல்வன் உயிரிழந்தார். இதுகுறித்து, புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர். ***
03-May-2025