உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறை கைதிக்கு பேட்டரி வக்கீலிடம் விசாரணை

சிறை கைதிக்கு பேட்டரி வக்கீலிடம் விசாரணை

புழல், நவ. 9- புழல் சிறையில் உள்ள விசாரணை கைதியிடம், மொபைல் போன் பேட்டரி கொடுத்த வழக்கறிஞரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரபல ரவுடி நாகேந்திரன் மகன் அஜித்ராஜ், 28. இவர், கடந்த மே மாதம், கொடுங்கையூர் போலீசாரால், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். அவரை, புழல் சிறையில் சந்தித்து பேச, புட்லுாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜ், 28, என்பவர், நேற்று முன்தினம் வந்துள்ளார். சிறையில் சந்தித்து பேசிய போது, அஜித்ராஜ்க்கு மொபைல் போனுக்கு பயன்படுத்தும் பேட்டரியை மறைவாக கொடுக்க முயற்சி செய்துள்ளார். இதை சிறைக் காவலர்கள் பார்த்து, பேட்டரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, வழக்கறிஞரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி