உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ நிர்வாகம் அனுமதி தராததால் சைதையில் கழிப்பறை கட்டுவதில் சிக்கல்

மெட்ரோ நிர்வாகம் அனுமதி தராததால் சைதையில் கழிப்பறை கட்டுவதில் சிக்கல்

சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து, பூந்தமல்லி, கேளம்பாக்கம், மாமல்லபுரம், குன்றத்துார் உள்ளிட்ட இடங்களுக்கு, நேரடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.தவிர பாரிமுனை, தி.நகர், அயனாவரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, தாம்பரம், பூந்தமல்லி, வேளச்சேரி நோக்கி செல்லும் பேருந்துகள், இருவழி பாதையாக, இங்கு நின்று செல்கின்றன.மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையம் அருகில் உள்ளதால், ஏராளமான பயணியர், இந்நிலையத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்நிலையத்தில் அவசர தேவைக்கு ஒரு கழிப்பறைகூட வசதி இல்லை.இதனால் ஆண்கள், மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் மறைவான பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். அங்கு துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது.சர்க்கரை நோயாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள், இயற்கை உபாதை கழிக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.அதேபோல், அங்குள்ள நேர காப்பாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களும், கழிப்பறை இல்லாமல் அவதிப்படுகின்றனர்.இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில், கழிப்பறை, பெண்கள் பாலுாட்டும் அறை இருந்தது. மெட்ரோ ரயில் பணியின்போது, அவை அகற்றப்பட்டன. மீண்டும் கழிப்பறை அமைக்க தயாராக உள்ளோம்.அப்பகுதியை மெட்ரோ ரயில் நிர்வாகம் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், அதன் அனுமதி கிடைத்ததும், கழிப்பறை அமைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை