உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதைப்பொருள் விற்பனை துணை நடிகைக்கு காப்பு

போதைப்பொருள் விற்பனை துணை நடிகைக்கு காப்பு

சென்னை, ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே பெண் ஒருவர், மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருளை விற்க வர உள்ளதாக, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, நேற்று மதியம் தகவல் கிடைத்தது.நேற்று மதியம், சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார், போதைப் பொருள் விற்க வந்தபெண்ணை சுற்றி வளைத்தனர். அண்ணாசாலை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.சேலம் குறுக்குப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த எஸ்தர் என்கிற மீனா, 27 என்பது தெரியவந்தது.சென்னை கோவிலம்பாக்கம் கண்ணதாசன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதும், சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்து வருவதும் தெரியவந்தது.மீனாவை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 5 கிராம் எடையிலான மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை