உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்

காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்

திருவொற்றியூர், காஸ் சிலிண்டர் விலையுயர்வை கண்டித்து, காங்கிரசார் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், காஸ் சிலிண்டர் விலையுயர்வை கண்டித்தும், வடசென்னை வடக்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் சார்பில், திருவொற்றியூர் தேரடி தபால் நிலையம் முன், நேற்று கண்டன ஆர்பாட்டம் நடந்தது. மீனவர் பிரிவு தலைவர் ரகு தலைமை வகித்தார். வடசென்னை கிழக்கு மாவட்ட காங்., தலைவர் திரவியம் உள்ளிட்ட, 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.ஆர்பாட்டத்தில், சிலிண்டருக்கு நாமம் போடப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. முன்னதாக, காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி