உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது - ரயில் ஓட்டுனர்கள் கழகம் சென்ட்ரலில் ஆர்ப்பாட்டம்

பொது - ரயில் ஓட்டுனர்கள் கழகம் சென்ட்ரலில் ஆர்ப்பாட்டம்

சென்னை, சென்னை கடற்கரையில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற மின்சார ரயில், கடந்த 29ம் தேதி இரவு, வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் நின்று புறப்பட்டது.அப்போது, மர்ம நபர்கள் சிலர், ஓட்டுனர் மீது கல்லெறிந்து தாக்கி உள்ளனர். இதில், காயமடைந்த ரயில் ஓட்டுனர் முருகனின் தாடையில் காயம் ஏற்பட்டு, மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவத்தை கண்டித்து, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், அகில இந்திய ரயில் ஓட்டுனர்கள் கழகம் சார்பில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ரயில் ஓட்டுனர் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் ஓட்டுனர்களுக்கு ரயில்வே போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ