உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளத்தில் சிக்கிய மாநகர ஏசி பேருந்து

பள்ளத்தில் சிக்கிய மாநகர ஏசி பேருந்து

வேளச்சேரி, வேளச்சேரி - தரமணி சாலையில், வடிகால்வாய் மற்றும் கழிவுநீர் குழாய் பதிக்க தோன்றிய பள்ளத்தை, ஒப்பந்த நிறுவனம் முறையாக மூடவில்லை.அதனால், சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து, பள்ளம் பெரிய அளவில் இருந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்நிலையில், நேற்று காலை, கோயம்பேட்டில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி, மாநகர 'ஏசி' பேருந்து சென்று கொண்டிருந்தது.விஜயநகர் பேருந்து நிலையம் கடந்து சென்ற போது, இந்த பள்ளத்தில் பேருந்தின் முன் சக்கரம் சிக்கி, பேருந்து ஒருபக்கமாக சாய்ந்தது.உடனே பயணியர் கீழே இறக்கப்பட்டனர். பின், இழுவை வாகனத்தை வரவழைத்த போக்குவரத்து போலீசார், பேருந்தை அங்கிருந்து அகற்றினர். இதனால், வேளச்சேரியில் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை