உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது/ சிறுமியிடம் அத்துமீறியவர் கைது

பொது/ சிறுமியிடம் அத்துமீறியவர் கைது

எம்.கே.பி., நகர், சிறுமியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். எம்.கே.பி., நகரைச் சேர்ந்தவர், 12 வயது சிறுமி, வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம், வீட்டிற்கு பெயின்ட் அடிக்க வந்த, வியாசர்பாடியைச் சேர்ந்த மூர்த்தி, 50, என்பவர், சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து, சிறுமி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் எம்.கே.பி., நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், பெயின்டர் மூர்த்தியை, போலீசார் நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !