மேலும் செய்திகள்
ம.நீ.ம., பெண் நிர்வாகி ஆட்டோ ஓட்டுநர் மோதல்
22-Jul-2025
கோயம்பேடு, கோயம்பேடு பேருந்து நிலையத்தில், ஆட்டோ ஓட்டுநரிடம் மொபைல் போன் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் நரேஷ்குமார், 30; ஆட்டோ ஓட்டுனர். இவர், கடந்த 27ம் தேதி இரவு, கோயம்பேடு பேருந்து நிலையம் இரண்டாவது நடைமேடையில் படுத்து துாங்கினார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது, பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் திருடு போனது தெரியவந்தது. விசாரித்த கோயம்பேடு போலீசார், மொபைல் போன் திருடிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், 20, என்பவரை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
22-Jul-2025