உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையில் தீ பற்றி எரிந்து நாசமான பல்சர் பைக்

சாலையில் தீ பற்றி எரிந்து நாசமான பல்சர் பைக்

பூந்தமல்லி, பூந்தமல்லியை சேர்ந்தவர் அருண், 25; தனியார் வங்கி ஊழியர். நேற்று, திருவேற்காட்டில் இருந்து பூந்தமல்லி நோக்கி, பஜாஜ் பல்சர் பைக்கில் சென்றார்.பூந்தமல்லி, குமணன்சாவடி அருகே சென்ற போது, இவரது பைக்கின் முன்பகுதியில் இருந்து, அதிக அளவில் புகை வெளியேறியது.இதையடுத்து, பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு, அருண் இறங்கினார். சிறிது நேரத்தில், பைக் தீ பிடித்து, கொழுந்து விட்டு எரிந்தது. அருண் காயமின்றி தப்பினார்.தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.அதற்குள் பைக் முழுதும் எரிந்து நாசமானது. பைக் தீ பற்றி எரிந்தது குறித்து, பூந்தமல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ