உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நெரிசலில் சிக்கிய பேசின்பாலம்

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நெரிசலில் சிக்கிய பேசின்பாலம்

புளியந்தோப்பு, 'மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டில், பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கு 1 சதவீத உள்ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வை மாற்றுத்திறனாளிகள், சென்னையில் பல இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபடுவோரை, போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.இது தொடர்பாக, பார்வை மாற்றுத்திறனாளி சங்கத்தினர், உயர் நீதிமன்றத்தை நாடினர். அதற்கு 'போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான உரிமையை சட்டப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்; திடீரென சாலையில் அமர்ந்து போராட முடியாது.ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில், போலீஸ் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி மறுத்தால், நீதிமன்றத்தை நாடலாம்' என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இருந்தும், அனுமதியின்றி பல இடங்களில் போராடி வருகின்றனர். நேற்று முன்தினம் பெரம்பூர் பகுதியில் போராட்டம் நடந்தது.இந்த நிலையில், பேசின்பாலம் ரயில் நிலையம் அருகே சாலையில் நேற்று காலை 10:30 மணியளவில் 30க்கும் மேற்பட்டோர், திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பேசின்பாலம் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ