உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குன்றத்துார் சார் பதிவாளர் அலுவலகத்தில்  ரெய்டு

குன்றத்துார் சார் பதிவாளர் அலுவலகத்தில்  ரெய்டு

குன்றத்துார், குன்றத்துார் சார் பதிவாளர் அலுவலகத்தில், இரவு 9:00 மணி வரை சோதனை நடந்தது.குன்றத்துார் சார் பதிவாளர் அலுவலகத்தில், நிலங்கள் பத்திரப் பதிவு செய்ய லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கலைச்செல்வம் தலைமையில், நேற்று மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை சோதனை நடத்தினர். பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள், பத்திரப்பதிவு அலுவலர் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சில ஆவணங்களை எடுத்து சென்றனர். பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என, லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினர். இரவு வரை சோதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை