ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: பெரம்பூர் கேரேஜ் பணிமனையில், அடிப்படை வசதி செய்து தரக்கோரி, தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் பெரம்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் பணிமனையில், 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், ஊழியர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை, கழிப்பறைகள் மோசமாக இருக்கின்றன. ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.ஆர்.இ.எஸ்., எனும் தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில், பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் பணிமனையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.