உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில் பாதை மேம்பாட்டு பணி வந்தே பாரத் சேவையில் மாற்றம்

ரயில் பாதை மேம்பாட்டு பணி வந்தே பாரத் சேவையில் மாற்றம்

சென்னை, பேசின்பிரிட்ஜ் - வியாசர்பாடி இடையே, ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், 'வந்தே பாரத்' உள்ளிட்ட சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், இந்துார் - கேரள மாநிலம், கொச்சுவேலி; ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் - கேரள மாநிலம், ஆலப்புழா விரைவு ரயில்கள் இன்று மாற்றுப்பாதையாக, கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி வழியாக செல்வதால், சென்ட்ரலுக்கு செல்லாது. பெரம்பூரில் நின்று செல்லும் சென்ட்ரல் - விஜயவாடா காலை 5:30 மணி வந்தே பாரத் ரயில், நாளை சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்  பாலக்காடு - சென்ட்ரல் மாலை 4:10 மணி ரயில், இன்று கடற்கரைக்கு இயக்கப்படும் ஈரோடு - சென்ட்ரல் இரவு 9:00 மணி விரைவு ரயில், இன்று பெரம்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்  கே.எஸ்.ஆர்., பெங்களூரு - சென்னை சென்ட்ரல் இரவு 10:40 மணி; ஆலப்புழா - சென்ட்ரல் மாலை 3:20 மணி ரயில்கள், இன்று ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும் சென்ட்ரல் - மைசூர் சதாப்தி காலை 6:00 மணி ரயில், நாளை 45 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் சென்ட்ரல் - கோவை காலை 6:10 மணி ரயில், நாளை 40 நிமிடங்கள்; சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி காலை 6:25 மணி ரயில், நாளை 30 நிமிடங்கள் தாமதமாக செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை