| ADDED : நவ 28, 2025 05:24 AM
சென்னை: சென்னை புறநகர் மற்றும் மேம்பால மின்சார ரயில் தடத்தில், மாணவர்கள் சிலர் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. ரயிலில் அத்துமீறியதாக, இந்த ஆண்டில், ஜனவரி முதல் இதுவரை, 2,019 பேர் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து, 9 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ரயில் நிலையங்களில் அசுத்தம் செய்வது தொடர்பாக, 6,022 வழக்குகள் பதிவு செய்து, 8.80 லட்சம் ரூபாய் அபாதம் விதிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் படிக்கட்டு பயணம், சாகசங்கள் அல்லது பாதுகாப்பற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, எவ்வித பாரபட்சமும் இன்றி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.