உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைநீர் வடிகால் மூடி உடைந்து அபாய பள்ளம்

மழைநீர் வடிகால் மூடி உடைந்து அபாய பள்ளம்

நெற்குன்றம், நெற்குன்றத்தில் உடைந்துள்ள மழைநீர் வடிகால் மேல் மூடியை சீர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.வளசரவாக்கம் மண்டலம், 145வது வார்டு நெற்குன்றத்தில், ராஜிவ்காந்தி நகர் பிரதான சாலை உள்ளது. இச்சாலையில், 2015ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு பின், உலக வங்கி நியில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்தன. இதில், ராஜிவ்காந்தி நகர் பிரதான சாலை நடுவே மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. தற்போது, இந்த மழைநீர் வடிகாலில் உள்ள மேல் மூடி உடைந்து பள்ளம் ஏற்பட்டது.இந்த பள்ளத்தில் சிக்கி, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீர் வடிகால் மேல் மூடியை சீர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை