உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையுடன் 20 கிராமங்கள் இணைப்பு 26 இடத்தில் புதிய சாலை அமைக்க பரிந்துரை

சென்னையுடன் 20 கிராமங்கள் இணைப்பு 26 இடத்தில் புதிய சாலை அமைக்க பரிந்துரை

அரசுக்கு 'கும்டா' பரிந்துரைசென்னை: சென்னை பெருநகர் பகுதியில் வெளிவட்ட சாலை, சென்னை எல்லை சாலை ஆகியவற்றை 20 கிராமங்களுடன் இணைக்கும் வகையில், 26 புதிய சாலைகள் அமைக்க போக்குவரத்து குழுமமான 'கும்டா' அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. சென்னை பெருநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக, உள்வட்ட சாலை, சென்னை புறவழிச்சாலை, வெளிவட்ட சா லை ஆகியவை அமைக்கப்பட்டன. இதையடுத்து சென்னை எல்லை சாலை திட்டத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அமைக்கப்பட்ட சாலைகளுடன் உள்ளூர் சாலைகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் முறையான சாலை வசதிகள் இல்லை. இதனால், பிரமாண்டமான இச்சாலையை அந்தந்த பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக, உள்ளூர் சாலைகளை மேம்படுத்தவும், புதிய சாலைகள் அமைக்கவும் சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது. இதற்காக, சி.எம்.டி.ஏ., சாலை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதற்கான பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் நெடுஞ்சாலை துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் சாலை பணிகள் குறித்த உயர் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது. கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் உள்வட்ட சாலை, சென்னை புறவழிச்சாலை, வெளிவட்ட சாலை, சென்னை எல்லை சாலை ஆகிய பணிகள் போக்குவரத்து மேம்பாட்டில் முக்கிய அடையாளங்களாக மாறியுள்ளன. ஆனால் இந்த சாலைகள் ஒன்றுக்கொன்று எவ்வித தொடர்பும் இன்றி உள்ளன. மேலும், இந்த சாலைகளால் இடைப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பலன் கிடைப்பதில் பல்வேறு தடைகள் உள்ளன. எனவே, இந்த சாலைகளுக்கு இணைப்பு ஏற்படுத்தும் வகையில் புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இதன்படி, சென்னை பெ ருநகர் பகுதியில், 26 இடங்களில் புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என போக்குவரத்து குழுமமான 'கும்டா' பரிந்துரைத்துள்ளது. இதில், 20 சாலைகள் கிராமங்கள் வழியாக செல்லும் வகையிலும், ஆறு சாலைகள் ஊருக்கு வெளியில் செல்லும் வகையிலும் அைமக்க திட்டமிடப் பட்டுள்ளன. இதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறையினர் புதிய சாலை திட்டங்களை செயல்படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ