உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெற்றோரின் அலட்சியத்தால் மாயமான பிள்ளைகள் மீட்பு

பெற்றோரின் அலட்சியத்தால் மாயமான பிள்ளைகள் மீட்பு

தரமணி:தரமணி பகுதியில் 11 வயதுள்ள 6ம் வகுப்பு மாணவர், அவனது முன்றரை வயது தங்கை ஆகியோரை, நேற்று முன்தினம் இரவு, பெற்றோர் தனியாக விட்டு, பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பினர்.அப்போது, இருவரும் மாயமாகிவிட்டனர். அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து தரமணி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தேடியபோது, பறக்கும் ரயில்வே போலீசாரிடம் இருவரும் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்தது. அவர்கள் தரமணி போலீசாரிடம் இருவரையும் ஒப்படைத்தனர்.விசாரணையில், வாசலில் விளையாடிக் கொண்டிருந்த இருவரும், வழி தெரியாமல் சென்றதாக கூறப்படுகிறது. மாயமான மூன்று மணி நேரத்தில் குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு, உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ