மேலும் செய்திகள்
கிருஷ்ணா கால்வாயில் குளித்த வாலிபர் பலி
12-Apr-2025
ஆவடி, ஆவடி அடுத்த வெள்ளானுார், கிருஷ்ணா கால்வாய் ஓரம் குடிசை வீட்டில் வசிப்பவர் சரவணன், 32. டைல்ஸ் ஒட்டும் வேலை செய்கிறார். இவரது மனைவி துர்கா, 28. தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று அதிகாலை 2:00 மணியளவில், அவரது வீட்டில் கருகிய வாசனை வருவதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.சரவணன் எழுந்து பார்த்தபோது, குடிசை தீப்பிடித்து எரிய துவங்கியது. சரவணன், அனைவரையும் உடனடியாக வெளியேற்றி, 'காஸ்' சிலிண்டர் வெளியே எடுத்து வைத்து, பக்கத்துக்கு வீட்டில் வசிப்போருக்கும் தகவல் தெரிவித்தார். அதற்குள் தீ பரவி அருகில் உள்ள ராஜ்குமார், 30, ஹரி, 30, மற்றும் கோபால், 60, ஆகியோரது, குடிசைகள் பற்றி எரிந்தன.தகவலறிந்த ஆவடி தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீச்சி அடித்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தொழிலாளியின் சாமர்த்தியத்தால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில், நான்கு குடிசைகளில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.
12-Apr-2025