உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை ஸ்டான்லியில் உறவினர்கள் போராட்டம்

இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை ஸ்டான்லியில் உறவினர்கள் போராட்டம்

ராயபுரம், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த செழியன் - கிருஷ்ணவேணி தம்பதியின் மூத்த மகள் சுவாதி, 27. இவருக்கும், கோபாலபுரத்தைச் சேர்ந்த தானேஸ்வரன் என்பவருக்கும், 2023 டிச., 1 ல், திருமணம் நடந்துள்ளது.லண்டனில் வேலை பார்ப்பதால், தானேஸ்வரன், தன்மனைவி மனைவியை அழைத்துக் கொண்டு, லண்டன் சென்று விட்டார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சில மாதங்களுக்கு முன், புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு, சுவாதி வந்து விட்டார்.நேற்று முன்தினம் இரவு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மின்விசிறியில் துாக்கிட்டு, சுவாதி இறந்து கிடந்துள்ளார். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றர்.பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், சுவாதியின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் நேற்று மாலை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.தானேஸ்வரனை கைது செய்ய கோரி, மறியலிலும் ஈடுபட்டதால், ராயபுரம், பழைய சிறைச்சாலை, சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது.நிலைமையை சமாளிக்க, மருத்துவமனை பிரதான வாயிலை போலீசார் அடைத்ததால், ஊழியர்கள், நோயாளிகள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. மருத்துவமனைக்குள் நுழைய முயன்ற ஆம்புலன்சுகளும் திக்குமுக்காடின. சிறிது நேரம் கழித்து கதவு திறக்கப்பட்டது.ஆர்.டி.ஓ., இப்ராஹிம், தாசில்தார் பிரமிளா, வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேல், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து உறவின்கள் மறியலை கைவிட்டனர். தானேஸ்வரனை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.**


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !