உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேளச்சேரி ரயில்வே சாலை வடிகாலுக்கு விமோசனம்

வேளச்சேரி ரயில்வே சாலை வடிகாலுக்கு விமோசனம்

வேளச்சேரி:வேளச்சேரி முதல் தரமணி வரை உள்ள ரயில்வே சாலை, 2 கி.மீ., நீளம், 80 அடி அகலம் உடையது.கடந்த 2022ம் ஆண்டு முழு பயன்பாட்டுக்கு வந்தாலும், தொடர்ந்து பராமரிக்க முடியாமல், ரயில்வே நிர்வாகம் திணறியது.இந்த சாலையை ஒட்டி அமைக்கப்பட்ட 4 அடி அகல வடிகால் மிகவும் சேதமடைந்து, மேல் மூடி இல்லாமல் திறந்து கிடந்தது. இதனால், பாதசாரிகள், நடைபயிற்சியாளர்கள் வடிகாலில் விழுந்து விபத்தில் சிக்கினர்.இது குறித்து, நம் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது. இந்நிலையில், கடந்த மாதம் பராமரிப்புக்காக, இந்த சாலை மற்றும் அதை ஒட்டிய காலி இடங்களை, ரயில்வே நிர்வாகம், மாநகராட்சி வசம் ஒப்படைத்தது.இதையடுத்து, வடிகால் சீரமைக்கும் பணி நடக்கிறது. பக்கவாட்டில் சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து, துார்வாரி, மேல் மூடி அமைத்து புதுப்பிக்கப்படுகிறது.பருவமழை துவங்கியதால், இந்த பணியை விரைந்து முடிக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதன் வாயிலாக, வெள்ள நீரோட்டம் தடைபடுவதும், பாதசாரிகள் விபத்தில் சிக்குவதும் தவிர்க்கப்பட்டுள்ளது என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை