உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிடப்பில் சாலை விரிவாக்கப்பணி; ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தயக்கம்

கிடப்பில் சாலை விரிவாக்கப்பணி; ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தயக்கம்

சென்னை: முதல்வரின் கொளத்துார் தொகுதிக்குட்பட்ட, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஆறு ஆண்டுகளாகியும் அகற்றப்படாமல் உள்ளன.பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, கொளத்துார் - செங்குன்றம் சாலை ரெட்டேரி வரை செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. நடைபாதைகளை அருகில் உள்ள வணிக வளாகங்கள் ஆக்கிரமித்து விடுகின்றன.இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. 1986ல் இந்த சாலையை 70 அடியாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை வரிவாக்கம் தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன் திரு.வி.க நகரைச் சேர்ந்த எல்.டி.வில்லியம் மோசஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், நீதிபதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். அடுத்தடுத்து வந்த ஆட்சியால் சாலை விரிவாக்கப்பணிகள் கிடப்பிலேயே போடப்பட்டிருந்தன. இந்நிலையில், பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் கொளத்துார் - செங்குன்றம் சாலையில் பல பள்ளிகள், கல்லுாரி, அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் ஏராளமாகி விட்டன.மெட்ரோ ரயில் பணிகளும் பெரம்பூரில் நடந்து வரும் வேளையில், வாகன போக்குவரத்தும் அதிகரித்து விட்டதால் சாலை வரிவாக்க பணிகளை துவக்க வேண்டியது அவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

JeevaKiran
ஏப் 24, 2025 10:12

சாலையின் இரு புறம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதும். சாலை விசாலமாகும். உன்மையிலேயே அரசு இயந்திரம் செயலிழந்து விட்டது. இல்லையென்றால் இத்தனை ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டிருக்குமா? அரசு ஊழியர்கள் தண்டிக்க படுவதில்லை. அதான் காரணம்.


T.S.SUDARSAN
ஏப் 23, 2025 11:06

இதே கதி தான் வள்ளுவர்கோட்டம் ஹை ரோடு , நுங்கம்பாக்கம் ஹை ரோட்டில்.