பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம்
பூந்தமல்லி, மே 29-பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் பணி, நேற்று நடந்தது.பல இடங்களில், அந்தந்த கட்சியினரே தங்களது கொடிக்கம்பங்களை அகற்றினர். அகற்றாத இடங்களில் இருந்த, 32 கம்பங்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.மேலும், அங்கு மீண்டும் கொடிக்கம்பங்கள் வைக்காத அளவிற்கு, கான்கிரீட் அடித்தள பகுதியை, பொக்லைன் வாயிலாக பள்ளம் தோண்டி அப்புறப்படுத்தினர்.ராமானுஜர் தெருவில், கொடி கம்பங்களை அகற்றிய ஊழியர்கள், அங்குள்ள கல்வெட்டையும் அகற்ற முயன்றனர்.அப்போது, அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், கல்வெட்டை அகற்றுவதை விட்டு சென்றனர்.