உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லுாப் சாலையில் படர்ந்த மணல் அகற்றம்

லுாப் சாலையில் படர்ந்த மணல் அகற்றம்

சென்னை:மெரினா லுாப் சாலையில் புயலால் படர்ந்த மணலை,'பொக்லைன்' மற்றும் ஊழியர்களை பயன்படுத்தி, மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.மெரினா லுாப் சாலையில் நேற்று முன்தினம் புயல் காரணமாக, பலத்த காற்று வீசியது. இதனால், லுாப் சாலை முழுதும் மணல் படர்ந்து காணப்பட்டது. இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் சறுக்கி விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் நிலவியது. இதையடுத்து போக்குவரத்து போலீசார், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறினர்.அதன்படி நேற்று, மெரினா லுாப் சாலையில் குவிந்திருந்த மணலை, மாநகராட்சி அதிகாரிகள்,'பொக்லைன்' வாகனம் மற்றும் ஊழியர்களை பயன்படுத்தி அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ