உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

 நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஈஞ்சம்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலை எனும் இ.சி.ஆர்., நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணியில், நடைபாதையை ஆக்கிரமித்து அமைத்த கடைகளால், போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துகள் நடந்தன. இதையடுத்து, நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை, மாநகராட்சி அதிகாரிகள், நேற்று அகற்றினர். நிரந்தர பெட்டிக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் என, 30க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றி, நெரிசல் மற்றும் விபத்துக்கு தீர்வு ஏற்படுத்தினர். அதேபோல், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, மேற்கு சைதாப்பேட்டையில் நடைபாதையில் இருந்த தள்ளுவண்டி கடைகள், நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 'ராம்ப்' எனும் சாய்தளங்கள் மற்றும் படிக்கட்டுகளையும் இடித்து அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ