உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றம்

நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றம்

சென்னை :நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைக்காரர்கள் மற்றும் வாகன ஓட்டிகளால் நிறுத்தப்படும் வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் , 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. அந்தந்த காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், நடைபாதை ஆக்கிரமித்து, கடைக்காரர்கள் மற்றும் வாகன ஓட்டிகளால் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி கூறியதாவது :சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், நடைபாதை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்த முடியாத வகையில், தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டிருந்தன.ஆனால், நாளடைவில் தடுப்பு கற்கள் உடைந்து விட்டன. சில இடங்களில் வாகனங்களை நிறுத்ததிற்காகவே, கற்களை உடைத்து அகற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், சாலையில் நடந்து செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படுவதோடு, சாலைகளில் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக, சென்னை காவல் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் நடைபாதை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை