உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒரு மாதமாக வீட்டின் முன் தேங்கி நின்ற கழிவுநீர் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

ஒரு மாதமாக வீட்டின் முன் தேங்கி நின்ற கழிவுநீர் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

திருவேற்காடு, திருவேற்காடு நகராட்சி கே.பி.எஸ்., நகர் 4வது தெருவில் உள்ள வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் நிரம்பி வழிந்து, ஸ்ரீனிவாசன் என்பவரது வீட்டு வாசல் முன் கடந்த ஒருமாதமாக தேங்கி நின்றது.இது குறித்து, கடந்த 3ம் தேதி நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று, கழிவுநீரை வெளியேற்றியதுடன், மீண்டும் உள்புகாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனர். தொற்று பரவாமல் இருக்க 'ப்ளீச்சிங் பவுடர்' தெளித்தனர்.இது தற்காலிக தீர்வு தான் என தெரிவித்த பகுதிவாசிகள், பழைய வடிகாலை இடித்து புது வடிகால் கட்டி, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை