உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புனரமைக்கப்பட்ட மீன் அங்காடி திறப்பு

புனரமைக்கப்பட்ட மீன் அங்காடி திறப்பு

சென்னை, செப். 21-திருவல்லிக்கேணி, நடுக்குப்பத்தில் உள்ள மீன் அங்காடியில், 80 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தண்ணீர், கழிப்பறை, மின்சார வசதி உள்ளிட்டவற்றை மேம்படுத்தி தர வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, 26.42 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அங்காடிக்கான படிக்கட்டுகள், கழிவுநீர் வெளியேறும் பாதைகள், தண்ணீர், கழிப்பறை வசதிகள் அனைத்தும் புனரமைக்கப்பட்டன. இந்த மீன் அங்காடியை, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, நேற்று திறந்து வைத்தார். மேலும், 41 லட்சம் ரூபாய் செலவில், தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட கைப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் கேரம், டேபிள் டென்னிஸ், பேட்மின்டன், உடற்பயிற்சிக்கூடம் ஆகியவை அடங்கிய உள்விளையாட்டு அரங்கையும் திறந்து வைத்தார்.இதில், மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி., தயாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி