உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செம்மஞ்சேரியில் மிகவும் சேதமடைந்த 5,900 வீடுகள் சீரமைப்பு பணி துவக்கம்

செம்மஞ்சேரியில் மிகவும் சேதமடைந்த 5,900 வீடுகள் சீரமைப்பு பணி துவக்கம்

செம்மஞ்சேரி:செம்மஞ்சேரி, சுனாமி நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு, 64 ஏக்கர் பரப்பு கொண்டது. இங்கு, 2006ம் ஆண்டு கட்டப்பட்ட, 6,864 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீடும், 217 சதுர அடி பரப்பு கொண்டது.இங்குள்ள பல வீடுகள், மிகவும் சேதமடைந்து உள்ளன. கனமழையின் போது, கூரையில் இருந்து மழைநீர் கசிவதால், அங்கு வசிப்போர் மிகவும் சிரமப்பட்டனர்.இதையடுத்து, மிகவும் சேதமடைந்த 2,000 வீடுகளை சீரமைக்க, வாரியம் முடிவு செய்தது. இதற்காக, 15.68 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அதேபோல், கண்ணகி நகரில் 15,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில், 160 சதுர அடி பரப்பு கொண்ட இரண்டடுக்கு குடியிருப்பில், 3,400 வீடுகள் மற்றும் 238 சதுர அடி பரப்பு கொண்ட மூன்றடுக்கு குடியிருப்பில், 504 வீடுகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக, 20.76 கோடி ரூபாயை வாரியம் ஒதுக்கியது. இரண்டு பணிகளையும், சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த்ரமேஷ், நேற்று துவக்கி வைத்தார். உடன், வாரிய அதிகாரிகள் இருந்தனர்.கூரை சீரமைப்பு, கழிவுநீர் குழாய் மற்றும் மூடி புதுப்பிப்பு, கழிப்பறை சீரமைப்பு, ஜன்னல் ஜாடி புதுப்பிப்பு, சுவர் பூசுதல், வண்ணம் பூச்சு, மொட்டை மாடியில் டைல்ஸ் பதிப்பு, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன.பருவ மழைக்கு முன் அனைத்து பணிகளையும் முடிக்க, வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை