உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி பூங்காக்கள் மீண்டும் திறப்பு

மாநகராட்சி பூங்காக்கள் மீண்டும் திறப்பு

சென்னை, டிச. 3-புயலால் மூடப்பட்டிருந்த, 871 பூங்காக்களில் துாய்மை பணி நிறைவடைந்ததை அடுத்து, இன்று முதல் பொதுமக்கள் பயன்படுத்தலாம் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கை:'பெஞ்சல்' புயல் மற்றும் கனமழை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி பூங்காக்கள் மூடப்பட்டிருந்தன. கனமழை முடிவுற்றதை தொடர்ந்து, 871 பூங்காக்களிலும் தீவிர துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. விழுந்த மரங்கள், மரக்கழிவுகள், குப்பை அகற்றப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு, இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.தீவிர துாய்மை பணி காரணமாக, 15 மண்டலங்களிலும், நேற்று முன்தினம் முதல் இதுவரை, 36.80 லட்சம் கிலோ குப்பை கழிவு அகற்றப்பட்டுள்ளன.மேலும், நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, 192 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, 10,226 பேர் பயனடைந்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி