உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடியரசு தின ஒத்திகை: போக்குவரத்து மாற்றம்

குடியரசு தின ஒத்திகை: போக்குவரத்து மாற்றம்

சென்னை, குடியரசு தினவிழா கொண்டாட்டம், வரும் 26ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி, மெரினா காமராஜர் சாலையில் மேற்கொள்ளப்பட உள்ளது.அதனால், வரும் 20, 22, 24 ஆகிய நாட்கள், அப்பகுதி சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட உள்ளது.. காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை, காலை 6:00 மணி முதல் ஒத்திகை நிகழ்ச்சி முடியும் வரை, வாகனங்கள் அனுமதிக்கப்படாது அடையாறிலிருந்து, காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள், பசுமை வழிச்சாலை சந்திப்பிலிருந்து, திருவேங்கடம் சாலை, தேவநாதன் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, ரங்கா சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை.  மியூசிக் அகடாமி, டி.டி.கே., சாலை, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை ஜி.பி., சாலை வழியாக அண்ணா சாலை செல்லலாம் அடையாறு பகுதியிலிருந்து, காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள், காந்தி சிலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பிவிடப்படும். மியூசிக் அகாடமி, டி.டி.கே., சாலை, கவுடியா மடம் சாலை, ஜி.பி., சாலை, அண்ணா சாலை வழியாக செல்லலாம் மயிலாப்பூர் பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும், ராயப்பேட்டை நெடுஞ்சாலை வந்து, ராயப்பேட்டை 1 பாயின்டில், இடதுபுறமாகவோ அல்லது வலது புறமாகவோ திரும்பி தங்களின் இலக்கை அடையலாம். மாநகர பேருந்துகள் இடதுபுறமாக திரும்பி, ராதாகிருஷ்ணன் சாலை, மியூசிக் அகாடமி, டி.டி.கே., சாலை, கவுடியா மடம் சாலை, ஜி.பி., சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே செல்லலாம் டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக, காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், ஐஸ் ஹவுஸ் சந்திப்புநோக்கி திருப்பி விடப்படும் டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், ஐஸ் ஹவுஸ் நோக்கி திருப்பி விடப்படும் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், பாரதி சாலை மற்றும் பெல்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்படும் வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில், உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள், பெல்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்படும் அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம், தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்படும் பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக, அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் செல்லாமல், வடக்கு துறைமுக சாலை வழியாக, ராஜா அண்ணாமலை மன்றம். வாலாஜா பாயின்ட், அண்ணா சாலை, ஜி.பி., சாலை, வெஸ்ட் காட் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லாயிட்ஸ் சாலை, நீதிபதி ஜம்புலிங்கம் தெரு இடது புறம் திரும்பி, ராதாகிருஷ்ணன் சாலை வழியாக செல்லலாம் அண்ணா சாலை மற்றும் கொடிமர இல்ல சாலை சந்திப்பிலிருந்து, போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ