மேலும் செய்திகள்
எஸ்.கரிசல்குளத்தில் நாளை பங்குனி பொங்கல் விழா
05-Apr-2025
திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டல அலுவலகம் அருகே, காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட, சண்முகனார் பூங்கா உள்ளது. இந்த பூங்காவினுள், 2006ம் ஆண்டு, நீச்சல் குளம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.பின், பல்வேறு காலகட்டங்களில் நீச்சல் குளம் பராமரிப்பின்றி மூடப்பட்டு, மீண்டும் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.இந்நிலையில், 2022ல், நீச்சல் குளம் பராமரிப்பு பணியை மேற்கொண்டிருந்த தனியார் ஒப்பந்த நிறுவனம், அப்படியே விட்டு சென்றதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக, நீச்சல் குளத்தில் இருந்த மின்மோட்டார்கள் உள்ளிட்ட பொருட்கள் களவு போனதாக கூறப்படுகிறது. தற்போது, நீச்சல் குளம் முழுதும் பாசி படர்ந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது.தற்போது, கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், நீச்சல் குளத்தை பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், திருவொற்றியூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிவாசிகளும் பயன்பெறுவர்.நீச்சல் குளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
05-Apr-2025