உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சேதமான பஸ் நிழற்குடை சீரமைக்க வேண்டுகோள்

சேதமான பஸ் நிழற்குடை சீரமைக்க வேண்டுகோள்

அயனாவரம்:கொன்னுார் நெடுஞ்சாலையில் சேதமடைந்து கிடக்கும், மாநகர பேருந்து நிறுத்தத்தின் பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.அண்ணா நகர் மண்டலம், அயனாவரம், கொன்னுார் நெடுஞ்சாலையில், நுார் ஹோட்டல் மாநகர பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தத்தில், 'தடம் எண் 120, 27ஏ, 48சி' உள்ளிட்ட பேருந்துகள் நின்று செல்கின்றன. இப்பகுதியைச் சேர்ந்த பயணியர், இந்நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடையில், பல மாதங்களுக்கு முன் இருக்கைகள் உடைந்து சேதமடைந்தன.அவற்றை சீரமைக்காமல் இருப்பதால், பயணியர் கடும் அவதியடைகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை கண்காணித்து, பயணியர் நிழற்குடை இருக்கைகளை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை