வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்பவே 23, 25 பெட்டிகள். முதல், கடைசி பெட்டியிலிருந்து ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கு. ஒண்ணு பண்ணுங்க. சென்னை முதல் திருச்சி வரை ஒரே பிளாட்பாரமா கட்டிருங்க. மக்கள் இறங்கி நடந்து போயிருவாங்க.
சென்னை; தீபாவளி பண்டிகையின்போது, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என, தென்னக ரயில்வே பணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவசுந்தரம் வலியுறுத்தி உள்ளார். தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்: தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பாண்டியன், கன்னியாகுமரி, பொதிகை, முத்து நகர், அனந்தபுரி, சிலம்பு ஆகிய விரைவு ரயில்களுக்கான டிக்கெட் விற்பனை, துவங்கிய இரண்டு நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது. அனைத்து ரயில்களிலும் 200க்கும் மேற்பட்டோர், காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அதனால், அனைத்து ரயில்களிலும் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். தீபாவளி சிறப்பு அறிவிப்பிலும், பல ரயில்கள் செங்கல்பட்டில் இருந்தும் இரவு 12:00 மணிக்கு இயக்கப்படுகின்றன. இது, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வோருக் கு பயன் தராது. அதனால், வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் நாகர்கோவில், மஹால், போடிநாயக்கனுார் சிறப்பு ரயில்களை தினமும் இயக்க வேண்டும். இனி அறிவிக்க உள்ள சிறப்பு ரயில்களை, எழும்பூரில் இருந்து இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இப்பவே 23, 25 பெட்டிகள். முதல், கடைசி பெட்டியிலிருந்து ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கு. ஒண்ணு பண்ணுங்க. சென்னை முதல் திருச்சி வரை ஒரே பிளாட்பாரமா கட்டிருங்க. மக்கள் இறங்கி நடந்து போயிருவாங்க.