மேலும் செய்திகள்
வங்கி ஊழியரிடம் மொபைல் போன் பறிப்பு
26-Oct-2024
சென்னை:அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜலாலுதீன், 19, சலீம் அலி, 20. இருவரும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு பணி முடிந்து, ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகே நடந்து சென்றனர். அப்போது மர்ம நபர் ஒருவர், இவர்களை மிரட்டி, மொபைல் போனை பறித்துள்ளார்.அந்த நேரத்தில், அங்கு ரோந்து பணியில் இருந்த அண்ணாசாலை போலீசார், அந்த மர்ம நபரை பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், அவர் ஜாம்பஜார், ஜானி ஜான்கான் சாலையைச் சேர்ந்த அப்துல்லா, 23, என தெரிந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், மொபைல்போன் ஒன்றை பறிமுதல் செய்தனர்.
26-Oct-2024