உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 4 பெண்கள் மீட்பு

பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 4 பெண்கள் மீட்பு

அண்ணா நகர், அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு வீட்டில், பாலியல் தொழில் நடப்பதாக, அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று, அந்த வீட்டில் சோதனை செய்தபோது, வாடகைக்கு வீடு எடுத்து, பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதியானது.இதையடுத்து, ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த சாந்தோஷ், 43, என்பவரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த, நான்கு பெண்கள் மீட்கப்பட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ