உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு அச்சக பணியாளர்களுக்கான குடியிருப்புகள் விரைவில் திறப்பு

அரசு அச்சக பணியாளர்களுக்கான குடியிருப்புகள் விரைவில் திறப்பு

புதுவண்ணாரப்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில், அரசு அச்சகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகள், விரைவில் திறக்கப்பட உள்ளன. தமிழக அரசு அச்சகத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள், புதுவண்ணாரப்பேட்டை, காமராஜர் நகரில், 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகளில் வாழ்ந்து வந்தனர். அக்குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து அபாயகரமான நிலையில் காட்சியளித்தது. குடியிருப்பில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தவிர்க்கும் வகையில், மக்கள் வாழ தகுதியற்ற நிலையில் இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு, புதிய குடியிருப்புகள் கட்ட முடிவெடுக்கப்பட்டன. இதில், வாகன நிறுத்தத்துடன் கூடிய, ஆறு தளம் கொண்ட 96 குடியிருப்புகள் கட்ட, 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிந்து, விரைவில் திறப்பு விழா காண உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசின் எழுதுப்பொருள், அச்சுத் துறையின் அரசு அச்சகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, புதிய குடியிருப்புகளை கட்டுவதற்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் உத்தரவிட்டு, 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினர். தற்போது, புதுவண்ணாரபேட்டை, காமராஜர் நகரில், புதிதாக ஆறு மாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதில் 96 பணியாளர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், 430 சதுர அடி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளத்திற்கும் 16 குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பணிகள் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில், குடியிருப்புகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை