கூரையில் செடி வளர்வதால் குடியிருப்பு நிலை மோசம்
சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, எழில் நகரில் நான்கு அடுக்கு உடைய 6,000க்கும் மேற்பட்ட வாரிய வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் குடியேறியதில் இருந்து, கட்டடத்தில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறோம்.விரிசல், மழைநீர் கசிவு, பக்கவாட்டில் செடி வளர்வது, ஜன்னல் சிலாப் உடைப்பு என பிரச்னை அதிகரிக்கிறது.தற்போது, மொட்டை மாடியில் செடிகள் வளர்வதால், கூரை வலுவிழக்கும் வாய்ப்பு உள்ளது. குழாயில், செடியின் வேர்கள் சுற்றி இருப்பதால், குழாய் சேதமடைந்து குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும். மொட்டை மாடி, பக்கவாட்டில் வளரும் செடிகளை அகற்றி, குடியிருப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராகேஷ், சோழிங்கநல்லுார்.