மேலும் செய்திகள்
திடீர் பள்ளத்தால் விபத்து அபாயம்
28-Dec-2024
பாடி 88வது வார்டு, குமரன் நகர் விரிவாக்கம் பகுதியில், 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், பாரதியார் நகர், சக்தி நகர் மற்றும் முல்லை தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.அப்பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. இரவு நேரம் மட்டுமின்றி, பகலிலும் தெரு நாய்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை துரத்துகின்றன. இதனால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் சாலையில் நடந்து செல்ல தயங்குகின்றனர்.இது குறித்து, அம்பத்துார் மண்டல அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சசிகுமார்,குமரன் நகர்.
28-Dec-2024