உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மோட்டார் வைத்து மழைநீரை வெளியேற்றிய குடியிருப்புவாசிகள்

மோட்டார் வைத்து மழைநீரை வெளியேற்றிய குடியிருப்புவாசிகள்

ஆவடி,ஆவடி, கோவில் பதாகை ஏரி உபரிநீர், இரண்டாவது நாளாக நேற்றும் வெளியேறி, கணபதி அவென்யூ வழியாக பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.அதேபோல், ஆவடி அடுத்த பாலவேடு, கரிமேடு அண்ணா நகர் பிரதான சாலையில், 5க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இடுப்பளவுக்கு வெள்ளம் தேங்கியதால், அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே வர முடியாமல், இயல்பு வாழ்க்கை முடங்கியது.வெள்ளத்துடன் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகளும் வீடுகளுக்குள் புகுந்ததால் அப்பகுதிவாசிகள் அச்சமடைந்தனர்.சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சொந்த செலவில் மோட்டார் வைத்து வெள்ளத்தை வெளியேற்றினர்.திருநின்றவூர், பெரியார் நகரில் தேங்கிய வெள்ளத்தை, மோட்டார் வாயிலாக வெளியேற்றி வருகின்றனர். அன்னை இந்திரா நகர், எல்.ஐ.சி., தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. பெரியார் நகரில் இருந்து வெள்ளம் வெளியேற்றப்படுவதால், இந்திரா நகரில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை