உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுங்கத்துறை ஓய்வு கமிஷனர் செந்திவேல் காலமானார்

சுங்கத்துறை ஓய்வு கமிஷனர் செந்திவேல் காலமானார்

சென்னை, சுங்கத்துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற செந்தி வேல், 86, வயது மூப்பு காரணமாக, சென்னையில் காலமானார். பாளையங்கோட்டையை சேர்ந்தவர் செந்திவேல். இவர், 1967ம் ஆண்டு இந்திய வருவாய் துறை பணியில் சேர்ந்தார். பின், 1995ல், சென்னை விமான நிலையம் மற்றும் துறைமுகத்தில், சுங்கத்துறை கமிஷனராக பணியாற்றினார். மத்திய கலால், வங்கி பணியாளர் தேர்வாணைய தலைவர் என, முக்கிய பதவியில், 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். பின் பணி ஒய்வு பெற்று சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக சென்னையில், இம்மாதம் 17ம் தேதி காலமானார். செந்தி வேலுக்கு, ராஜகுமாரி என்ற மனைவியும், அஷோக் என்ற மகனும், அமுதா, சித்ரா என்ற இரு மகள்களும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை