| ADDED : ஜன 22, 2024 01:15 AM
சென்னை:தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. அந்த வகையில், பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி சார்பில், 14 வயதினருக்கான வாலிபால் மற்றும் 17 வயதினருக்கான பீச் வாலிபால் போட்டிகள் நடந்தன.இதில், 14 வயதிற்கு உட்பட்ட மாணவியருக்கான வாலிபால் போட்டியில், பல்வேறு மண்டலங்களில் வெற்றி பெற்ற அணிகள் பங்கேற்றன. அனைத்து சுற்றுகள் முடிவில் இறுதிப் போட்டிக்கு, பெரம்பூர் எம்.எச்., சாலை அரசு பள்ளி மற்றும் முகப்பேர் வேலம்மாள் பள்ளி அணிகள் தகுதி பெற்றன. அதில், 23 - 25, 25 - 12, 25 - 19 என்ற கணக்கில், பெரம்பூர் அரசு பள்ளி முதலிடத்தை பிடித்தது.அதேபோல், மாணவர்களில் ராயபுரம் கலைமகள் பள்ளி மற்றும் ஆலந்துார் மான்போர்ட் பள்ளிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான போட்டியின் முடிவில், 25 - 16, 25 - 17 என்ற கணக்கில் ராயபுரம் கலைமகள் பள்ளி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. மூன்றாம் இடத்தை சாந்தோம் பள்ளி அணி கைப்பற்றியது. முன்னதாக நடந்த பீச் வாலிபால் போட்டியில், சூளை ராட்லர் அரசு பள்ளி மாணவியர் முதலிடத்தை பிடித்தனர்.