ஆர்.எம்.டி.,பொறியியல் கல்லுாரி மண்டல கூடைப்பந்தில் சாம்பியன்
சென்னை, அண்ணா பல்கலைக்கு உட்பப்ட கல்லுாரிகளை, பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன..அந்த வகையில், முதலாவது மண்டலத்திற்கான இருபாலருக்கான கூடைப்பந்து போட்டி, திருவள்ளூர் மாவட்டம், கவரைபேட்டை ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரியில் நடத்தப்பட்டது.பெண்களுக்கான முதல் அரையிறுதியில், ஆர்.எம்.டி., பொறியியல் கல்லுாரி, 20 - 12 என்ற கணக்கில் எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரியை தோற்கடித்தது.மற்றொரு அரையிறுதியில் வேலம்மாள் பொறியியல் கல்லுாரி அணி, 16 - 7 என்ற கணக்கில், ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரியை தோற்கடித்தது.நேற்று முன்தினம் நடந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், ஆர்.எம்.டி., பொறியியல் கல்லுாரி 30 - 14 என்ற புள்ளியில், வேலம்மாள் பொறியியல் கல்லுாரியை தோற்கடித்து கோப்பையை வென்றது.எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரி அணி, 22 - 20 என்ற கணக்கில், ஆர்.எம்.கே., பொறியியல் அணியை தோற்கடித்து, மூன்றாம் இடத்தை கைப்பற்றியது.